புதுடெல்லி: டெல்லியில் பேரவை தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இந்த
தேர்தலில் இப்போது எம்எல்ஏக் க ளாக உள்ள 70 பேரில் 66 பேர் மீண்டும்
போட்டியிடுகின்றனர். இவர்கள் கடந்த முறை போட்டியிட்ட போது காட்டிய சொத்து
மதிப்பு, 5 ஆண்டுகளில் சராசரியாக 259 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய
வந்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் 810 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள்கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் காங்கிரஸ் சார் பில் போட்டியிடும் 70 பேரில் 61 பேரும், பா.ஜ. சார்பில் போட்டியிடும் 66 பேரில் 58 பேரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 70 பேரில் 33 பேரும் கோடீஸ்வரர்கள். 4 வேட்பாளர்கள் மட்டும் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இப்போது மீண்டும் போட்டியிடும் 66 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2008ம் ஆண்டில் ரூ.2.90 கோடியாக இருந்தது. 2013ல் இது ரூ.10.43 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பா.ஜ.சார்பில் பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடும் சத் பிரகாஷ் ரானா, கடந்த 2008ல் தனது சொத்து மதிப்பு ரூ.6.38 கோடியாக குறிப்பிட்டிருந்தார். 2013ல் இது ரூ.111.89 கோடியாக உயர்ந்துள்ளது.
பாதர்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராம் சிங் நேதாஜியின் சொத்து மதிப்பு ரூ.8.44 கோடியிலிருந்து ரூ.58.71 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட 140 பேர் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு 2008ம் ஆண்டில் சராசரியாக ஸி2.57 கோடியாக இருந்தது ரூ.8.90 கோடியாக உயர்ந்தள்ளது.
ரஜோரி கார்டனில் போட்டியிடும் அகாலிதள வேட்பாளர் மஞ்சித் சிங் தனக்கு ரூ.235.51 கோடிக்கும், மோதி நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுசில் குப்தா ரூ.164.44 கோடிக்கும், கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரசின் அசோக் குமார் ஜெயின் ரூ.143.69 கோடிக்கும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
174 வேட்பாளர்கள் தங்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மதிப் பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். பா.ஜ. வேட்பாளர்களில் அம்பேத்கர் நகரில் போட்டியிடும் குஷி ராம் சுனார் ரூ.8.27லட்சத் துக்கு மட்டும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் சீமாபுரி தொகுதியில் போட்டியிடும் தர்மேந்தர் சிங் கோலி, தனக்கு ரூ.20,800 மதிப்பு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போட்டியிடுபவர்களில் 280 வேட்பாளர்கள் பட்டதாரிகள், 479 வேட்பாளர்கள் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

கருத்துரையிடுக