சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மக்கள்தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று காவல்துறை வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.
உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 தெற்கு ஆசிய தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

கருத்துரையிடுக