சமூகவலை தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பெங்களுருவில் உள்ள மொபைல் போன்களுக்கான திறனாய்வு மற்றும் பராமரிப்பு மென்பொருள்களைத் தயாரிக்கும் லிட்டில் ஐ லேப்ஸ் என்னும் நிறுவனத்தை அறிவிக்கப்படாத ஒரு தொகைக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக தன் வர்த்தகக் காலடியை எடுத்து வைத்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
கலிபோர்னியா பயணம்.. இந்த ஒப்பந்தம் முடிந்த கையேடு, ஒட்டுமொத்த லிட்டில் ஐ லேப்ஸ் அணியும், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகம் அமைத்துள்ள மென்லோ பார்க்கிற்கு இடம் மாற்றம் செய்ய உள்ளது.
அங்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வர்த்தக முயற்சியான மொபைல்களுக்குத் தேவையான திறன் குறைபாடுகளை நீக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடரும்.
எனினும், தொழில்நுட்ப செய்தி இணையதளமான டெக்ரஞ்ச் இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என அளவிட்டுள்ளது. அளவு சிறியதாக இருந்தாலும், பேஸ்புக் நிறுவனத்தால் முதன்முதலில் வாங்கப்படும் இந்திய கம்பெனியாக லிட்டில் ஐ முக்கியத்துவம் பெறுகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தூண்..
"இந்த முயற்சியின் மூலம், லிட்டில் ஐ லேப்ஸ், பேஸ்புக் முயற்சிகளில் பங்கெடுத்து மொபைல் மென்பொருட்கள் முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை அடைய முயலும். இது பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு என்பதோடு, நாங்கள் அதுபோன்ற ஒரு சிறந்த அணியில் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என அந்நிறுவன இணையதள அஞ்சல் குறிப்பு தெரிவிக்கிறது.
கலிபோர்னியா பயணம்.. இந்த ஒப்பந்தம் முடிந்த கையேடு, ஒட்டுமொத்த லிட்டில் ஐ லேப்ஸ் அணியும், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகம் அமைத்துள்ள மென்லோ பார்க்கிற்கு இடம் மாற்றம் செய்ய உள்ளது.
லிட்டில் ஐ லேப்ஸ் வேஞ்சரீஸ்ட் மற்றும் ஜிஎஸ்எஃப் ஆகிய முதலீட்டாளர்களின் முதலீடுகளின் துணையோடு நடத்தப்படுகிறது.
கருத்துரையிடுக