Don't use Mobile Phones on driving |
இன்று, உலகையே உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டது, மொபைல் போன். இதன் வரவால் பல சாதக அம்சங்கள் உள்ளன; பாதக அம்சமும் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சிக்கும், பணி எளிமைக்கும், விரைவான தகவல் தொடர்புக்கும் உதவும் மொபைல் போன், சில நேரங்களில் சிலரின் வாழ்க்கைக்கு எமனாக மாறி வருகிறது.தினமும் பல இடங்களில், மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் பலரை பார்க்க முடிகிறது. இவர்கள், கவனக்குறைவால் விபத்துகளை சந்திக்கின்றனர். இதில் உயிரிழப்போர், உடல் உறுப்புகளை இழப்போர் என பலர், தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் அவலம் தொடர்கிறது.அதனால், மொபைல் போனில் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்கவும்.
கருத்துரையிடுக