தகவல் |
விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்@ரா Œாப்ட், அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது.
அந்த விசாரணையின் பொது ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது
அப்போதுதான் தெரிய வந்துள்ளது !! ஹாட்மெயில் தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அமைக்கும்போது, அதற்கான அந்நிறுவனத்தின் விதிமுறைகளை முழுமையாகப் படிப்பதில்லை.
சிறிய எழுத்துக் களில் மிக நீளமாக இருப்பதனைப் பொறுமையுடன் படிக்க இயலாமல், அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக Accept என்ற பட்டனில் கிளிக் செய்து,
அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம். இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், Microsoft 'may access or disclose information about you, including the content of your communications.' எனத் தரப்பட்டுள்ளது.
மைக்ரோ சாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது.
இதனை தொடர்ந்து , கூகுள் மற்றும் யாஹூ மின் அஞ்சல் தளங்களின் சேவைகளுக்கான நிபந்தனைகளைப் பார்த்த போது, அவையும் இது போன்ற நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிகளையும் விதித்துள்ளன என்பது தெளிவாகிறது.
நம்மைப் பற்றிய தகவல்கள் (டேட்டா) அவர்களின் சர்வர்களிலேயே பதிவாவதால், அவற்றை அணுகுவதற்கோ, கைப்பற்றுவதற்கோ, இந்த நிறுவனங்களுக்கு நீதி மன்ற ஆணைகளும் அனுமதியும் தேவை இல்லை.
உங்கள் இரகசிய தகவல்களை ஹாட் மெயில்,ஜிமெயில் மற்றும் யாஹூ mailலில் இருந்து நீக்கிவிடுங்கள்.இல்லை எனில் உங்கள் தகவல்களை அவர்கள் கைபட்ற முடியும் ..
கருத்துரையிடுக