கபில்சிபல் |
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதனால் ஆ.ராசாவுக்குப் பதில் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற கபில் சிபல் மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார்.
ஆனால் அதன்பிறகு தான் சி.பி.ஐ. விசாரணையில் பல ஆதாரங்கள் சிக்கி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த கபில் சிபல் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவர் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை எவ்வளவோ அதே அளவு வாக்குகளை கபில் சிபல் பெற்றுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டது. கபில் சிபல் தேர்தலில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று சொன்னவருக்கு அதே எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கபில் சிபலுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பி.சிதம்பரம், மணீஷ் திவாரி ஆகியோரும் ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் கபில் சிபலை டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்த்தன் தோற்கடித்தார்.
ஆம்ஆத்மி வேட்பாளர் அததோஷ் 2–வது இடம் பெற்றார்.
கபில் சிபல் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கருத்துரையிடுக