A+ A-

நீளமான நதி நைல் நதியா ? இல்லை மிஸோரி மிஸி- ஸிபி நதியா?

அமெரிக்காவுக்கு எப்பவுமே தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கு இயற்கையும் கூட விதிவிலக்கு இல்லை.

மிஸோரி மிஸி- ஸிபி

உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதிதான்.

இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள்.

அமெரிக்காவால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸி- ஸிபி நதிதான் என்று அடம்பிடித்தது.

இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது.

அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நைல் என்பது ஒரே நதி.

ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை.

மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன.

இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்கவில்லை.


இதேபோல்தான் நயாகரா விஷயத்திலும் நடந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ருவைரா நீர்வீழ்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. இங்கு ஒரு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 காலன் நீர் விழுகிறது.

ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது.

உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது.


வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.


அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை.

லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி.

இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான்.


ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான்.

அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது.

உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதிதான். இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள். அமெரிக்காவால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸி- ஸிபி நதிதான் என்று அடம்பிடித்தது.