A+ A-

ஜுன் ௧௨(12) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1429 - நூறாண்டுகள் போர்: ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.

1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.

1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1899 - ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநீலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

1902 - ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

1934 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1935 - பொலீவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தனர்.

1943 - நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.

1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.

1990 - ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.

1991 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.

1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1998 - லெப்டினண்ட் கேணல் திருவடி நினைவுநாள்.

1999 - நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.

2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1924 - ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்

1932 - பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)

1942 - பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய உடற்றொழிலியலாளர்

1957 - ஜாவெட் மியன்டாட், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாளர்

பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்

ரஷ்யா - ரஷ்ய நாள் (1990)

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.