இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி.
1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.
நவம்பர் 19, 1835இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார்.
இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.
சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.
1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர்.
பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.
மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது.
இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார்.
வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.
ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ஆம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.
இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் திகதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை மார்ச்சு 31ஆம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது.
ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த சான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார்.
எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.
ஜான்சி இராணி 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.
இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார்.
இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858ஆம் ஆண்டு சூன் 17ஆம் திகதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் சான்சி ராணி போரிட்டார்.துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி. பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.
சில நிகழ்வுகள் இந்நாளில்
ஐஸ்லாந்து - தேசிய நாள் (1944)
பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்
1579 - சேர் பிரான்சிஸ் டிறேக் "நோவா அல்பியன்" (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானாள்.
1839 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
1885 - விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
1940 - இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1940 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 - பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1953 - பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் (இ. 1791)
1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்
1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்
1980 - வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
1940 - இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1940 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
1944 - பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர்.
1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 - பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1953 - பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1987 - மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.
2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நாளில் பிறந்த பிரபலங்கள்
1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் (இ. 1791)
1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்
1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்
1980 - வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
இந்நாளில் மறைந்த பிரபலங்கள்
1911 - வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)
2001 - டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919)
கருத்துரையிடுக