A+ A-

ஜூன் ௨௬(26) சர்வதேசதில் சித்திரவதைக்கு ஆளானோருக்கான ஆதரவு நாள்(International Day in Support of Torture Victims)

ஜூன் ௨௬(26) சர்வதேசதில் சித்திரவதைக்கு ஆளானோருக்கான ஆதரவு நாள்


சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.

ஜூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்றன.

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்

மடகஸ்கார் - விடுதலை நாள்

ருமேனியா: கொடி நாள்

சோமாலிலாந்து - விடுதலை நாள்

363 - ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.

1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.

1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.

1718 - தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.

1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.

1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.

1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1824 - வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)

1838 - பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)

1892 - பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)

1924 - இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)

1906 - ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)

இன்று மறைந்த பிரபலங்கள் 


1995 - ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)


சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.