இரவிக்குளம் தேசியப் பூங்காவில் இருந்து ஆனை முடியின் தோற்றம். |
அமைவிடம்:கேரளா, இந்தியா, மேற்குத் தொடர்ச்சி மலை
தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை
சிறப்பு 2, 695மீ தென் இந்தியாவில் மிகவும் உயரமான மலைச்சிகரம்
ஆள்கூறுகள் 10°10′N, 77°04′E
ஆனமுடி (தமிழில் ஆனைமுடி) என்னும் மலை முகடு தான் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடம்.
இரவிகுளம் தேசிய பூங்கா:
மூணாறு அருகே, 97 சதுர கி.மீ., சுற்றளவைக் கொண்ட இந்த பூங்கா, ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனங்களாலும், 90 சதவிகிதம் புல் மேடுகளாலும் சூழப்பட்டது. இங்கு தான், தென்னிந்தியாவின் மிக உயரமான, ஆனைமுடி சிகரம் (8,841 அடி) உள்ளது. இதன் தாழ்வாரத்தில், பரந்து கிடக்கும் இரவிகுளம் தேசிய பூங்காவில், அக்காந்தேசியா இனத்தைச் சேர்ந்த, 46 வகை குறிஞ்சி செடிகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும், அபூர்வ இன, வரையாடுகளும் உள்ளன.
தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது.

கருத்துரையிடுக