ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகத்துடன், மலிவு விலை பொருட்கள் எப்படி வாங்குவது குறித்த சற்றே விரிவான கட்டுரைதான். பொறுமையாக படித்து நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகப்படுத்துங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா?
உங்களுக்குதான் இந்த கட்டுரை இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சுறுசுறுப்படைந்து கடந்த ஒரு வருடமாக அதி வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயங்கி வருகிறார்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் என்றால் ஒருவித பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணங்கள்....
ஆன்லைன் ஷாப்பிங்-ல ஏமாத்திடுவான்.......
பொருள் தரமா இருக்காது....
நேரா போய் தொட்டு பார்த்து வாங்குற மாதிரி வருமா?.....
முகம் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்புறது எப்படி...
கொண்டுட்டு ஓடிப் போயிட்டா.... என்று பலவித காரணங்கள், குழப்பங்கள்.
அறியாமையே இந்த குழப்பங்களுக்கு காரணம்.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் இளைஞர்கள் மட்டும் தான் என்று இருந்த காலம் மாறி முதியவர்களும் சரளமாக கம்ப்யூட்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இணையமா...? பேஸ்புக்கா...? நமக்கெல்லாம் ஒத்து வராது என்று ஓடியவர்கள், பிரபலங்கள் எல்லாம் இன்று பேஸ்புக்கில் வெளுத்து வாங்குகிறார்கள். இதெல்லாம் இல்லேன்னா நம்ம பொழப்பு ஓடாது என்று நிலைக்கு வந்து விட்டார்கள்.
ஏன்?
இவை எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று ஆகி விட்டது. ரேஷன் கார்டுல பேர் இல்லாதவர்களை கூட காணலாம்.... பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவரை பார்க்க முடியாது என்ற நிலை. தெரிந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பயன்படுத்துகிறார்கள்.
இதே போன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங்கும். அறிந்து கொள்வது, கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் பெரும்பாலான பொருட்கள் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது பொருள் வாங்க அடுத்தவர் உதவிக்காக காத்திருப்பது கஷ்டம். எனவே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பியுங்கள். சிறிது சிறிதாக பழகுங்கள்.
இந்தியாவில் Ebay,
Flipkart,
Amazon,
Myntra,
Jabong,
Snapdeal,
Shopclues உள்ளிட்ட நல்ல தரமான ஷாப்பிங் தளங்கள் தங்கள் சேவையை செவ்வனே செய்து வருகின்றன. தங்களால் இயன்றவரை கஸ்டமர்களை திருப்தி படுத்துகின்றன. எனவே தான் அவை மேன்மேலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு என எளிமையான கட்டணம் செலுத்தும் வழிமுறைகள். வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு வசதி இல்லாதவர்களுக்கு, வீட்டுக்கு கொண்டு வந்து பொருட்களை கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ளும் Cash on Delivery வசதி.
பொருட்கள் அளவு உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் வேறு அளவு மாற்றிக் கொள்ளும் Exchange வசதி.
பொருள் பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெறும் Easy Return வசதி என இந்திய ஆன்லைன் தளங்கள் உலகத் தரத்தில் சேவையை வழங்கி வருவது உண்மை. உங்கள் வீடு தேடி வந்து பொருட்களை திரும்ப பெற்று செல்வார்கள்.
Flipkart , Amazon, Jabong போன்ற நிறுவனங்கள் பெரும்பாலான இந்திய நகர்களில் தனக்கென பிரத்தியேகமாக தங்கள் கூரியர் அலுவலகங்களை திறந்து உள்ளன.
சரி சார்... எனக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யணும்னு ஆர்வமாத்தான் இருக்கு,,,,,எங்கிருந்து ஆரம்பிப்பது?
துவக்கத்திலேயே பெரிய அளவில் பணம் போட்டு பொருட்களை வாங்குவதை விட சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கிப் பழகுங்கள். ஆன்லைனில் ரூ. 10, ரூ. 20 போன்று மொபைல் ரீசார்ஜ் செய்து பாருங்கள். மொபைல் ரீசார்ஜ் செய்ய சிறந்த தளங்கள். http://paytm.com , http://freecharge.in . உடனுக்குடன் ரீசார்ஜ் ஆகி விடும்.
அறிமுக சலுகையாக, பல இலவச ரீசார்ஜ் சலுகைகளும் வழங்குகிறார்கள்.
அவற்றை பயன்படுத்தி பாருங்கள். உதாரணத்திற்கு சில
Freecharge.in -ல் ரூ. 20 க்கு இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகை - http://goo.gl/XtCcNX
Freecharge.in -ல் ரூ. 10 க்கு இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகை - http://goo.gl/Kh9lYM
Paytm.com -ல் ரூ. 50 செலுத்தி ரூ. 100 ரீசார்ஜ் பெறுங்கள் - http://goo.gl/pmXLPb
அடுத்து சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கி பழகலாம். அதற்கு ஏற்ற தளம் http://shopclues.com இந்த இடத்தில் shopclues தளம் பற்றி சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த தளத்தில் பொருட்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும்.
நீங்கள் கொடுக்கும் விலைக்கு நல்ல மதிப்புடன் இருக்கும். அதே நேரம் ரூ. 100 கொடுத்து விட்டு ரூ. 1000 அளவுக்கு அதிக தரம், வசதி எதிர்பார்க்க கூடாது. உங்கள் அதிக எதிர்பார்ப்பே உங்களுக்கு ஏமாற்றம் தரும். கொடுத்த காசுக்கு ஓக்கேவா .... என்பது சரி.
ஒரு லட்ச ருபாய் பணம் கொடுத்து விட்டு ஆடி கார் வரும் என எதிர் பார்க்க கூடாது. மாருதி கார் வந்திருக்கா சூப்பர்... .
சுருங்க சொல்ல வேண்டும் என்றால் shopclues என்பது நமது ஊர் பாண்டி பஜார், பர்மா பஜார் மாதிரி சைனா பஜார்.
பொருட்கள் வாங்கும் முன்பு கீழே அந்த பொருட்களை ஏற்கனவே வாங்கிவர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை (Reviews) படித்துப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.
Shopclues தளம் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் "Sunday Flea Market" என்ற பெயரில் மலிவு விலை சந்தை போன்று பொருட்களை விற்பார்கள். ரூ. 23 -லிருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட்கள்.
உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் வீட்டுக்கு பொருட்கள் வந்தடையும்.
Sunday Flea Market மலிவு விலை பொருட்களை பார்வையிட - http://goo.gl/ljRSO
உதரணத்திற்கு சில சலுகைகள் :
ரூ. 90 மதிப்புள்ள 6 கோல்கேட் டூத் பிரஷ்கள் ரூ. 53 மட்டுமே, Flipcover for Samsung & Micromax, Nokia , Motorola, Sony and Lava xolo ரூ. 73 மட்டுமே., மூன்று 1 லிட்டர் மில்டன் வாட்டர் பாட்டில் ரூ. 83 மட்டுமே.
ரூ. 150 மதிப்புள்ள மரத்தாலான 5 கரண்டிகள் ரூ. 83 மட்டுமே. ரூ. 75 மதிப்புள்ள ரஸ்ணா ரூ. 45 மட்டுமே.
மேலும் இது போன்ற தினசரி சலுகைகளை அறிந்து கொள்ள நீங்கள் துட்டு.காம் http://thuttu.com தளத்தை சரியானது. அவ்வப்போது வரும் சலுகைகளை உடனுக்குடன் பதிவார்கள். பெரும்பாலான சலுகைகள் சில மணி நேரங்களில் காலாவதி ஆகி விடும் அல்லது விற்றுத் தீர்ந்து விடும். எனவே முந்துபவர்களுக்கே தள்ளுபடி சலுகைகள்.
சிறிய வயதில் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நமது பெற்றோர் நமக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்கள். ஆன்லைனில் பொருட்கள் மலிவான விலையில் சிறப்பாக வாங்குவதை சிறுக சிறுக நாமே கற்றுக் கொள்வோம்.
நன்றி.
இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி. இதனை Share செய்வதன் மூலம் அதிகம் நண்பர்களை இந்த செய்தி சென்றடைந்து, அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
கருத்துரையிடுக