A+ A-

ஜுன் ௧௩(13) சில வரலாற்று நிகழ்வுகள்..


சில நிகழ்வுகள் இந்நாளில் 


1871 - லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1881 - ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1886 - பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.

1886 - பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.

1917 - முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.

1925 - சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.

1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.

1948 - ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.

1952 - சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.

1955 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1978 - இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.

1981 - லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.

1983 - பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

2006 - நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.

2007 - திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1831 - ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (இ. 1879)

1897 - ஜெப்ரி ஃபார்ன்பீல்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1974)

1933 - யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)

1944- பான் கி மூன், ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளர்

1966 - கிரிகோரி பெரல்மான், ரஷ்யக் கணிதவியலாளர்

1969 - சார்ல்ஸ் ஃபோர்வார்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.

1987 - ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

இன்று மறைந்த  பிரபலங்கள் 


1972 - கியோர்க் வொன் பெக்கெசி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)

2012 - மெஹ்தி ஹசன் ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகர். (பி. 1927)

1925 - சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார். 1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர். 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.