A+ A-

விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்


விண்வெளியில் சிதறிக்கிடக்கும் தேவையற்ற குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் நவீன செயற்கைக் கோளை அனுப்ப உள்ளது.

விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கை கோள் மூலம் பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த கனவுத் திட்டத்திற்கு இ-டிஆர்பிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நூறு ஆண்டுகளாக ஏவப்படும் விண்கலன்களில் இருந்து சிதறிய குப்பைகள் பூமியைச் சுற்றி ஒரு வளையமாக சுற்றி வருகின்றன. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காபி கோப்பையை விட பெரிதாக கண்காணிக்கத்தக்க வகையில் உள்ளன. இந்த குப்பைகள் மோதுவதால் விண்வெளி பயணங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. ஒரு செ.மீ. நட்டுகூட ஒரு கையெறி குண்டு போன்று வேகமாக மோதும்.

குறைந்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றித்திரியும் உடைந்த செயற்கைக்கோள் பாகங்கள் போன்ற பெரிய அளவிலான பொருட்களை அகற்றி, அவற்றை மேல் நிலைகளுக்கு செலுத்துவதுதான் இந்த குப்பைகளை கட்டுப்படுத்த ஒரே வழி.

குப்பைகளை வலைகள் மூலம் மீன்பிடிப்பது போல் பிடித்து 800 கி.மீ. முதல் 1000 கி.மீ. உயரத்துக்கு கடத்தி துருவ வட்டப்பாதையில் விடும் வகையில் இ.டிஆர்பிட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பிடிக்கும் பல்வேறு வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள் விண்வெளியில் சிதறிக்கிடக்கும் தேவையற்ற குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் நவீன செயற்கைக் கோளை அனுப்ப உள்ளது. விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கை கோள் மூலம் பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த கனவுத் திட்டத்திற்கு இ-டிஆர்பிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-