தினம் ஒரு இடம் :எட்னா எரிமலை(Mount Etna)
ஐரோப்பாவின் உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை .
இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மலையான எட்னா எரிமலை
ஐரோப்பாவிலேயே மிக தீவிரமாக உறுமிக்கொண்டிருக்கும் இந்த எட்னா எரிமலையின் முகத்துவாரம் ஆப்பிரிக்க புவி ஓடு மற்றும் யுரேசியா புவி ஓட்டிற்கும் இடையில் விலகும் விளிம்பின் மேல் 3350 மீட்டர் உயரத்தில் உள்ளது
ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பொங்கிய இந்த எரிமலை
இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. 1669 ஆம் ஆண்டு பொங்கியதில் 20000 பேர் இறந்தனர்.
எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பேர் 2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள்.
1992 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் பகல் அன்று வெடித்தது. சிசிலியில் கடானியா வானூர்தி நிலையம் அருகில் இந்த எரிமலை உள்ளது. எனவே எரிமலை வெடித்தபோது வெளியேறிய புகை வானிலும் விமான நிலையத்திலும் பரவியதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டது.
எட்னா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. எனவே மலையின் அடிவாரச் சரிவில் திராட்சைத் தோட்டங்களும் பிற பயிர்களும் வளர்க்கிறார்கள். எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கிறார்கள்.
ஐரோப்பாவின் உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை . இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மலையான எட்னா எரிமலை ஐரோப்பாவிலேயே மிக தீவிரமாக உறுமிக்கொண்டிருக்கும் இந்த எட்னா எரிமலையின் முகத்துவாரம் ஆப்பிரிக்க புவி ஓடு மற்றும் யுரேசியா புவி ஓட்டிற்கும் இடையில் விலகும் விளிம்பின் மேல் 3350 மீட்டர் உயரத்தில் உள்ளது
கருத்துரையிடுக