Bharathiar University
Bharathiar University


Bharathiar University Result



Results of Nov/Dec' 2014 Examination (All PG Courses) cpp

for Results-> Server 1 Server 2


Results of OCT' 2014 M.Phil., Examinations(Chemistry / Chemical Sciences / Sociology) cpp

for Results-> Click here to view...


Results of OCT' 2014 M.Phil., Examinations(English) 

for Results-> Click here to view...


Results of OCT' 2014 M.Phil., Examinations(Computer Science) 

for Results-> Click here to view...


Results of OCT' 2014 M.Phil., Examinations( Bio Technology, Commerce, Library & Information Science, Microbiology, Physical Education, Plant Biotechnology, Public Administration, Yoga for Human Excellance) 

for Results-> Click here to view...


UG Results of Nov/Dec' 2014 Examinations (All Affiliated Colleges) 

for B.Sc., Courses-> Server 1
For B.Com., Courses-> Server 1
For B.A., Courses -> Server 1

பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் கூரையில் பூ வைப்பது ஏன்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், நான்கு நாட்களுக்கு தொடர்கிறது. அதற்கான தொடக்கம், காப்புக் கட்டும் நிகழ்ச்சி. மார்கழி கடைசியில் பழையதை போக்க போகியும், பின் புதியவை புகுவதற்கு தையும் உதவுகிறது.


தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.

💭காப்புக் கட்டுவதின் நோக்கம், இன்றைய தலைமுறைக்கு தெரிவது இல்லை. அதன் பயனை, இருபதுகளுக்கு விளக்க, அறுபதுகள் முன் வருவதில்லை.
நகரங்களில் வசிப்போர், ஆயுத பூஜைக்கு பழம் வாங்குவதைப் போல், பொங்கலன்று கூரைப்பூ வாங்கி கடமையை முடிக்கின்றனர்.

🙀எதற்காக அதை வைக்கிறோம், என்பது, அவர்களுக்கு தெரிவதில்லை. பயனறிந்து, கூரைப்பூ பயன்படுத்தி, பொங்கல் கொண்டாடுவது,

கிராமங்களில்தான். அதன் பயன்பாடு, மகத்துவத்தை அவர்கள்தான், நன்கு உணர்ந்துள்ளனர். அப்படி என்ன அதில் இருக்கு, என்கிறீர்களா? கூரைப்பூவில் ஆறு விதமான தாவரம் இருக்கு; அதன் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குணம் உண்டு.

🌿மா இலை காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும், கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும், விஷ முறிவுக்கு உதவும்.

வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது, கொசுக்களை தடுக்கும்.

🌼ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ என்ற முன்னோர் மொழிக்கேற்ப ஆவாரம் பூ, சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பிரண்டை வயிற்றுப் புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்தது.

🌿இத்தனை சிறப்புகள் இருந்தும், ரூ.5க்கு வாங்கும் சம்பிரதாய பொருளாக மாறிவருகிறது கூரைப்பூ. இந்த ஆறு வஸ்துகளையும், மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் முன் தொங்கவிட்டால், மங்கலம், பாதுகாப்பு, ஆரோக்கியம், கிடைக்கும் என, நம் முன்னோர்கள் எழுதிச் சென்றுள்ளனர்.

கிராமங்களில், அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை, நோய்களிலிருந்து பாதுகாக்க, கூரைப்பூக்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்கில மருந்துகளுக்கு அடங்காமல், நம்மை ஆட்டி வைக்கும் நோய்கள் வந்த பிறகு தான், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஆம், நாமே தொலைத்து, நாமே தேடிக் கொண்டிருக்கும் மருத்துவ புத்தகங்களில், கூரைப்பூவின் பக்கமும் ஒன்று.

மலர்ச் செண்டு கொடுக்கும் நவீனத்தில் இருந்தாலும், நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமையை உணர்ந்து, கூரைப்பூ பயன்படுத்துங்கள் தமிழர்களே!

நம் உடலைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்,

அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள்.
அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,

கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்

நெகிழ வைத்த நிஜங்கள்...சிறுகதை

இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் அமுதன்.
“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து
விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என்
மனைவி.
அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.
“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை
அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை.
அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.
“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.
-
“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…
தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு
வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே
போவே...?’
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

2
Ombudsman

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், 

அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.


வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.


இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.


அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.


அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.


அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக  
Ombudsman  ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5

25/-ம் செலுத்தி உள்ளனர்.அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }"Ombudsman  சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.


மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.


இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.


எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை


PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS


Ombudsman

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.