உலக தண்ணீர் தினம் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச்(March) 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. உலகை வாழ வைக்கும் அமிர்தமான தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்.தண்ணீர் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாப்பதுதான்.
குப்பைகள், கழிவுகள், ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் அதன் தன்மையை இழந்து மாசடையாமல் பாதுகாக்க வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது,
நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது,
குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும்.
தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம்!!.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்!!
நீர்நிலைகளை பாதுகாப்போம்!!
தண்ணீர் வீணாவதை தடுப்போம்’!!
என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
மழை காலங்களில் அணைகள் நிரம்பி பல ஆயிரம் TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணிரை வரட்சியான பகுதிகளில் கொண்டு சேர்க்கலாம்!!
(எ.க )மழை காலங்களில் பவானிசாகர் அணையுள் இருந்து பல ஆயிரம் TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 TMC முதல் அதிகபட்சம் 109.23 TMC வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு பவானிசாகர் அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரை அவிநாசி அத்திக்கடவு திட்டதிக்கு பையன்படுதி தண்ணீரை சேமிக்கலாம்.!!
நிகழ்வுகள் இந்நாளில்
மேலும் சில நிகழ்வுகள் இந்நாளில்
1622 - வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள்
347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1829 - கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.
1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945 - அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.
1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.
1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004 - ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 - பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள்
1868 - ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)
1931 - பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இந்நாளில் மறைந்த பிரபலங்கள்
1627 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
2005 - ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)
கருத்துரையிடுக