நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் அதே கணினியில் வேலை செய்வதை கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?
ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?
தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ என்னை மட்டும் பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?
மணல் வீடு கட்டி விளையாடிய நீ என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?
கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?
மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?
அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?
நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?
நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?
எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?
இனியாவது நாம் சிந்திப்போமா?
நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதில் நம் பிள்ளைகளுக்கு இயற்கையும் நல்ல பண்புகளையும் விட்டு போவோம்..!
கருத்துரையிடுக