கோவை, ஈரோடு திருப்பூர் ஆகிய 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கை அவிநாசி- அத்திக்கடவு திட்டமாகும். 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரமான இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
விவசாயிகள் நிறைந்த , விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பகுதி திருப்புர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி. பெருமளவு விவசாயிகளை கொண்ட இந்த பகுதியில் நீர் ஆதாரம் இல்லாது மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இங்குள்ள பெருமளவு குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றிற்கு நிலத்தடி நீரே ஆதாரம்.
அவினாசிக்கு மிகவும் அருகாமையில் உள்ள திருப்பூர் மாநகரத்தின் அசுர வளர்ச்சியால் அங்கு ஆலைகளை நிறுவ இயலாத நிறுவனங்கள் அடுத்த இலக்காக அவிநாசியை தேர்வு செய்கின்றன. இதனால் அவிநாசி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பெருமளவு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் 1000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீர் கிடைக்காத சூழல் உள்ளது.
இதுபோலவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் விவசாயத்திற்கும் நீர் இல்லாத சூழல் நிலவி வருகிறது. அவிநாசி- அத்திக்கடவு கூட்டு நடவடிக்கை குழுவினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரியுள்ளனர். நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீடு என பல பிரச்னைகளை காரணம் காட்டி அவிநாசி -அத்திக்கடவு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவிநாசி மட்டுமல்லாமல் மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இருக்கும் அவிநாசி- அத்திகடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
#அவிநாசிஅத்திக்கடவு
#Avinashiathikadavu
THANKS NEWS 7 TAMIL
கருத்துரையிடுக