மைசூர் அரண்மனையும் |
மைசூர் அரண்மனை வரலாறு.
மைசூர் அரண்மனையில் உள்ள மன்னர் அமரும் தங்க இருக்கை. |
அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக மரத்தால் செய்து தீயில் கருகிய அரண்மனை பகுதியில் கலைநுட்பத்துடன் அரண்மனை எழுப்ப தீர்மானித்தார். அதற்கான பொறுப்பை சென்னை மாகாணத்தில் கட்டிடக்கலை நிபுணராக இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி இர்விடம் ஒப்படைத்தார். அவர் இந்திய,ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் அழகிய அரண்மனை அமைக்கும் பணி சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்றது. 1912ல் ‘அம்பா விலாஸ் அரண்மனை‘ திறப்பு விழா கண்டது.
நூறாண்டுகண்ட மைசூர் அரண்மனை 245 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 150 அடி உயரத்தில் சாம்பல் நிற சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிட உள்பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம்
அரண்மனையில் இரண்டாவது தளத்தில் மன்னர் குடும்பத்தினர் திருமணம் வைபபவம் நடக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் மக்களின் குறை கேட்க தர்பார் மண்டபம் அமைக்கபட்டுள்ளது. இங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை மன்னர் தரிசனம் செய்யும் வகையில் நேர்கோட்டில் தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்தில் அமைத்துள்ள தூண்கள், கம்பங்கள் அனைத்தும் சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் பலவிதமான படைப்புகள் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் மர வேலை செய்யும் தொழிலாளர்கள் வடிவமைத்துள்ள கதவு, ஜன்னல், அலங்கார கண்ணாடி அலமாரிகளில் கலைநுணுக்கங்கள் தற்போதும் பார்வையாளர்களை கவர்கின்றன. அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கண்ணாடி சுவர்கள் பொருத்தியுள்ளனர். ஓவியங்களில் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படும் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் அழகுசேர்க்கின்றன. ரவிவர்மன், எல்லோரா ஆகியோர் வரைந்த ஓவியங்கள் இன்று வரைந்ததை போல் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறு அனைத்தும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
97ஆயிரம் ஒளி விளக்குகள்
தண்ணீரில் பிரதிபலிக்கும் மைசூர் அரண்மனையின் அழகிய தோற்றம் |
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை |
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை |
அச்சமயத்தில் போலீசாரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தசரா விழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் மின் விளக்கு போடப்படுகிறது.
மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழா. |
அரண்மனையின் பின்னணியில், பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி |
மைசூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிது.
பேருந்து மார்கமாக சென்றால், மைசூர் நகரத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 5 அல்லது 10 நிமிடம் நடந்தாலே மைசூர் அரண்மனையை அடைந்து விடலாம். ஆனால் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலமாகச் செல்லும் பயணிகள், வெளியூர் பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு உள்ளூர் பேருந்து பிடித்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அரண்மனையை அடையலாம்.
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து, அரண்மனை சற்று தொலைவில் உள்ளது. எனினும், ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் அரண்மனைக்குச் செல்கின்றன. பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக ரயில் நிலையத்தில் இருந்து அரண்மனைக்குச் செல்லலாம்.
கருத்துரையிடுக