- வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து உங்கள் வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேக த்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
- காவல்துறையினர் வாகனங்களோ அல்லது ஆம்புலன்ஸ் வாகனங்ளோ அல்லது தீ அணைப்பு வாகனங்களை, அவசர ஒலி எழுப்பி வேகமாக வரும்போது அந்த வாகனங்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக அந்த வாகனங்கள் செல்ல வழிவிட வேண்டும்.
- நீங்கள் பைக்கில் நெடுஞ்சாலையில் செல்லும்போது சைடு மிர்ரர் (பக்க வாட்டு கண்ணாடி)யை அடிக்கடி பார்த்தது ஏதேனும் கனரக வாகனங்களோ பேரூந்துகளோ வந்தால், அந்த வாகனங்களுக்கு முதலில் வழிவிடுங்கள்.
- நீங்கள் வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, எச்சிலை துப்பாதீர்கள். அது உங்களுக்கு பின்னால் வருபவர்களை சற்று நிலை தடுமாறி விபத்துக்குள்ளாக நேரிடும்.
- மது அருந்திவிட்டோ அல்லது அருந்திக்கொண்டோ வாகனத்தை ஓட்ட வேண்டாம்.
வாகனம் ஓட்டும்போது தயவுசெய்து கவனமாக இருங்க....
For more Videos Subscribe https://www.youtube.com/user/tagavalthalam/
இணையத்தில் இருந்த தகவல்களை உங்களுக்க இணைக்கிறோம்.
கருத்துரையிடுக