A+ A-

தமிழ் இலக்கியங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும் !!




* திணை இலக்கியம் என்று அழைக்கப்படுவது சங்க இலக்கியம்.

* சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும். புறப்பாடல்கள் அனாத்தும் புலவர் கூற்றுகள் ஆகும்.

* எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுனூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியன.

* எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்து, புற நூல்கள் இரண்டு. அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).

* எட்டுத் தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறநானூறு.

* வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம். காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.

* அகநானூறு அகம் என்றும், அகப்பாட்டு என்றும், நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.

* புறநானூறு புறம் என்றும், புறப்பாட்டு என்றும், புறம்பு நானூறு என்றும் குறிப்பிடப்படுகிறது.

நற்றிணை

* இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றினையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.

* நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.

* தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகம், கொற்கை என்பது பாண்டிய நாட்டுத் துறைமுகம், மாந்தை என்பது சேர நாட்டுக் கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.

குறுந்தொகை

* குறுந்தொகை இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

* குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியதாகும்.

குறுந்தொகையின் மூலம் அறியப்படும் செய்திகள்:

* நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். அதியமானின் தலைநகரம் தகடூர்(தர்மபுரி).

* கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி. பரம்பு மலை தலைவன் பாரி.

* திருக்கோவிலூரையும், முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையாமான் திருமுடிக்காரி.

* கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.

* கரிகாலனின் மகள் ஆதிமந்தி.

* யாய் என்றால் என் தாய் என்று பொருள், ஞாய் என்றால் உன் தாய் என்று பொருள், தாய் என்றால் அவன் தாய் என்று பொருள்.

* எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள், நுந்தை என்றால் உம் தந்தை என்று பொருள், தந்தை என்றால் அவர்கள் தந்தை என்று பொருள்.

* அவ்வை என்றால் எம் அக்காள் என்று பொருள், நுவ்வை என்றால் உம் அக்காள் என்று பொருள், தவ்வை அவர்கள் அக்கா என்று பொருள்.

* கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார். (குறுந்தொகை)

ஐங்குறுநூறு

* இது ஒரு அகநூல். 500 பாடல்கள் கொண்டது. திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளின் கீழ் அமையப் பெற்றது. பாடிய புலவர்கள் ஐவர்.

* ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர்கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

* ஐங்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.

* சங்க கால மக்கள் பகல் 12 மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

* ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்ற செய்தியையும், பெண்களுக்கு இடக்கண் துடித்தால் மல்லது என்ற செய்தியையும் இந்நூலில்ருந்து அறிய முடிகிறது.

பதிற்றுப்பத்து

* சேர அரசர்கள் 10 பேர் பற்றஇ 10 புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து.

* முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பதிற்றுப்பத்தின் மூலம் அறியப்படும் செய்திகள்.

* கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.

* அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.

* கிடுகு என்றால் கேடயம் என்று பொருள் சேர நாட்டின் துறைமுகம் தொண்டி.
பரிபாடல்

* பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகைகலில் ஒன்று. எனவே பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் ஆகும்.

* எட்டுத் தொகை நூல்களிலேயே அகத்திற்கும், புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.

* பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
* தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.

* எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.

* எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு 1. பரிபாடல் 2. கலித்தொகை

* பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல். பரிபாடல் என்ற நூல் 70 பாடல்களைக் கொண்டதாக உள்ளது.

* பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.

* பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.

பரிபாடல் மூலம் அறியப்படும் செய்திகள்

* அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும். தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.

* நெய்தல், குழலை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.

* உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.

தமிழ் மொழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும் !!

கலித்தொகை

* இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது.

* கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.

* கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.

* ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு.

* பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை ஆகும்.

* நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.

அகநானூறு

* இது ஒரு அக நூல் ஆகும். ஆசிரியப்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.

* அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திர சன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆவார்.

* அகநானூறு களிற்றியானை நிறை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

* அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.

* குடவோலை முறைச் தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு.

* சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் குறிப்பிடும் அக நூல் அகநானூறு.

புறநானூறு

* இதுவொரு புற நூல். அகவற்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.

* புறநானூற்றைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

* புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழஹ்கப்படுகிறது.

* அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றியும் பாடும் நூல் புறநானூறு ஆகும்.

* சேரன் போந்தை (பனை) மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.

* சேரன் வில் கொடியையும், சோழன் புலிக்கொடியையும், பாண்டியன் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும், சோவனின் தலைநகரம் உறையூர் அல்லது உறந்தை, தஞ்சாவூர் (தஞ்சை) என்றும், பாண்டியனின் தலைநகர் மதுரை என்றும், பல்லவரின் தலைநகர் காஞ்சி என்றும் இது குறிப்பிடுகிறது.

* பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* பாரிக்கு உரிய மலை பரம்பு மலை, பேகனுக்கு உரியது பழனிமலை, ஓரிக்கு உரியது கொல்லிமலை, ஆய்க்கு உரியது பொதிகை மலை, அதியனுக்கு உரியது தகடூர், நன்னனுக்கு உரியது நவிரமலை போன்ற செய்திகளையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* கபிலரை ஆதரித்தவன் பாரி, ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன், மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.

தமிழ் என்ற எழுத்துகள் உருவான விதம்..........

* அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார். கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும் புறநானூறு மூலம் அறியலாம்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.

நன்றி:தினமணி

யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.