இன்று முதல் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க போகிறார்கலம் ...
அவர்கள் பெயர்:-
சந்தோஷம்
நிம்மதி
ஆரோக்கியம்
ஆனந்தம்
கல்வி
அறிவு
ஆயுள்
ஆற்றல்
இளமை
துணிவு
பெருமை
பொருள்
பொன்
பொன்
புகழ்
நிலம்
நன்மக்கள்
நல்லொழுக்கம்
நோயின்மை
முயற்சி
வெற்றி
மன்மத வருஷம்...
சித்திரை முதல் நாள்...
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.............
நம்மில் பலர் தை ௧(1) தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் நாம் ஏன் தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடுகிறார்கள் என்று ஆராயுந்து பார்த்தல் தெரியும் அதை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக ...
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே 12 ராசிகள் என அழைக்கப்படுகின்றன.
சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர்.
சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர்.
இதை அடிப்படையாக கொண்டு புதுவருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன.
அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள்.
இளவேனில் (சித்திரை, வைகாசி),
முதுவேனில் (ஆனி, ஆடி),
கார் காலம் (ஆவணி, புரட்டாசி),
கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை),
முன் பனிக்காலம் (மார்கழி, தை)
பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில்,
இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
கருத்துரையிடுக