A+ A-

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

திரீ கார்கஸ் (three gorges)அணையின் மொத்த நீளம் 2335 மீட்டர் அணையின் அடிப்பகுதி சுவர் 377 அடி அகலத்திலும், மேல்பகுதி 131 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது. அணையின் உயரம் 361 அடி.

இந்த அணை பற்றி வீடியோ வடிவில் ..

சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறுகளில் யாங்ஸ் நதி முதலிடத்தில் உள்ளது. இந்த ஆற்றில் சராசரியாக 10 லட்சம் கனஅடி தண்ணீர் செல்லும். அவ்வப்போது பெரும் வெள்ளம் ஏற்பட்டு கரையோர ஊர்களை அழிப்பதும் உண்டு. 1931–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமான கிராமங்களும் அழிந்தன. இதேபோல பல தடவை பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டில் மட்டும் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

இப்படி அதிக வெள்ளம் வந்து அழிவு ஏற்படுத்தும் நதியை ஆக்க சக்திக்கு பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் சீனாவிடம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 1919–ல் சீன அதிபராக இருந்த சன்யாட்சென் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனாலும் உடனடியாக பணிகளை தொடங்க முடியவில்லை. 1932–ல் அதிபராக இருந்த ஜியாங்கைசேக் அணை கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் 1939–ல் ஜப்பான் சீனாவுடன் போரிட்டு இந்த பகுதிகளை கைப்பற்றி கொண்டது. இதனால் அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

 ஜப்பான் வெளியேறிய பிறகு மீண்டும் அணை திட்டம் கையில் எடுக்கப்பட்டது. 1944–ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல என்ஜினீயர் ஜான் சேவேஜ்ஜை வரவழைத்து ஆய்வு நடத்தினார்கள். அவர் முழு ஆய்வு செய்து திட்டங்களை வடிவமைத்தார். பின்னர் சீனாவை சேர்ந்த 34 என்ஜினீயர்களை அமெரிக்கா அழைத்து சென்று அணை கட்டுமானம் தொடர்பான பயிற்சி அளித்தார்.

ஆனால் அணை கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறு விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் கட்டுமான பணியை தொடங்க முடியவில்லை. ஆனாலும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

இறுதியாக 1991–ம் ஆணடு தான் அணை கட்டும் பணிக்கு தேசிய மக்கள் சபை அனுமதி அளித்தது. 1994–ம் ஆண்டு டிசம்பர் 14–ந் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

ஜான்ஜிங் நகருக்கும், உகான் நகருக்கும் இடையே உள்ள சன்டோபிங் என்ற இடத்தில் மலைப்பகுதியில் அணை கட்டப்பட்டது. 2 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2009–ம் ஆண்டுக்குள் அணையை கட்டி முடிக்க திட்டமிட்டனர்.

ஆனால் கட்டுமான பணிகள் 2012–ல் தான் முற்றிலும் முடிந்து

அணையை கட்டி முடிக்க 98 ஆயிரம் லட்சம் கன அடி காங்கிரீட் கலவை, 4 லட்சத்து 63 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள ஈபிள் டவர் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பைவிட இது 63 மடங்கு அதிகமாகும்.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

இந்த அணை, மின் உற்பத்தி நிலையங்களை கட்ட மொத்தம் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளனர். சீனாவில் நீர்மின் நிலையத்தில் கிடைக்கும் மொத்த மின்சாரத்தில் 14 சதவீதம் இந்த அணையில் இருந்து கிடைக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 3 ஆயிரம் மெகாவாட் சீனாவின் முதன்மை தொழில் நகரமான ஷாங்காய்க்கு அனுப்பப்படுகிறது.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

மின் உற்பத்தி செய்வதற்காக மொத்தம் 34 டர்பைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 டர்பைன்கள் தலா 700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடியது. 2 டர்பைன்கள் தலா 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடியது. 700 மெகாவாட் திறன் கொண்ட 6 டர்பைன்கள் நிலத்துக்கு கீழே சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றவை மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

டர்பைன் எந்திரங்கள் அனைத்தும் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மின் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு ஜெனரேட்டரும் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. வினாடிக்கு 21 ஆயிரத்தில் இருந்து 31 ஆயிரம் கன அடி தண்ணீர் இதன் வழியாக செலுத்தப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

மேலும் இந்த அணை மூலம்  22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த ஆற்றில் ஏற்கனவே கப்பல் மற்றும் படகு போக்குவரத்து நடைபெற்றது. அணை கட்டியதால் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.

தினம் ஒரு இடம்:சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ்(three gorges) அணை

தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நடக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக திட்டம் ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். ஆற்றில் அணைக்கு அடி பகுதியில் வரும் கப்பல்களை அப்படியே தூக்கி மேல்பகுதியில் விட ராட்சத கிரேன்களை அமைத்து உள்ளனர். அவை அப்படியே கப்பல்களை தூக்கி மேல் பகுதியில் கொண்டு சென்றுவிட்டு விடும். இதற்காகவே அணையின் பக்கவாட்டு பகுதியில் பிரத்யேக வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அணை கட்டப்படுவதுக்கு  முன்பு அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் பல ஆயிரம் பேர் உயிர் இழந்தது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் அணை கட்டப்பட்ட பிறகு வெள்ள சேதம் நின்று விட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 1365 டி.எம்.சி. ஆகும். எனவே ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அணையில் தேக்கப்படுகிறது. எனவே திடீர் வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

திரீ கார்கஸ் (three gorges)அணையின் மொத்த நீளம் 2335 மீட்டர் அணையின் அடிப்பகுதி சுவர் 377 அடி அகலத்திலும், மேல்பகுதி 131 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது. அணையின் உயரம் 361 அடி.