சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம் என்பது இவர்களுக்கு அத்துப்படியாம்.
மோசடி நடப்பது இப்படித்தான்:
- பேஸ்புக் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை எடுத்துக்கொள்வார்கள்.
- செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள்.
- அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள்.
- பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான் கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள்.
- வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள்.
- வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங் பார்மட்டை கொண்டு புது பாஸ்வேர்டை உருவாக்குவார்கள்.
- பிறகு என்ன..? உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணி பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள்.
- இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள்.
கருத்துரையிடுக