A+ A-

நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட கொடுப்பீங்களா? அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?



வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..

 நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

 அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
 நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...

உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  என்ன கேள்வி இது..?

நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "

அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " 

 இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!


நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... " அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "