சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இதில் கோவை மாநகரில் மட்டும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1,200 போலீஸார் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் தலா ஒரு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார்.
வைரலான ட்ரோன் காட்சிகள்
திருப்பூரில் கேரம் விளையாடியவர்களை, போலீஸாரின் ட்ரோன் கேமரா படம் பிடித்ததும், அவர்கள் ஓட ஓட ட்ரோன் துரத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மலைப்பகுதியில் கும்பலாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் போலீஸாரின் ட்ரோன் கேமரா துரத்தி அடித்தது. குமரி மாவட்டத்தில் கடலில் குளித்தவர்களையும், திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களையும், காட்டுக்குள் பதுங்கிய இளஞ்ஜோடிகளையும்கூட ட்ரோன் கேமராக்கள் விட்டுவைக்கவில்லை.
Read More.. முழு ஊரடங்கில் மக்களைக் கண்காணிக்க ஸ்டேஷனுக்கு ஒரு ட்ரோன் கேமரா: கோவையில் சிறப்பு ஏற்பாடு
கருத்துரையிடுக