பொதுவாக காட்டுக்குள் ஹோட்டல், மலைக்கு மேல் ஹோட்டல், கடலுக்கு அடியில் ஹோட்டல் என விதவிதமான ஹோட்டல்கள் இருக்கின்றது. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி வியட்நாமில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசிய சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹோட்டல் என்ற பெருமையை அடைந்துள்ளது எனலாம்
இந்த ஹோட்டலானது, வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகியது. தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளதாகவும், ஒரு இரவு 250 டாலர் (R3 800) தான் தொடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொடுக்கப்படும் உணவிலும் மர்மமான தங்கப் பொருளுடன் வழங்குவதாகவும், ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை என அங்கு சென்று வந்தோர் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக