ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?
1. எந்தவொரு விடயத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
2. தான் எப்போது வேண்டுமானாலும் தோற்கடிக்கப்படலாம் என்பதைத் தெரிந்தே இருப்பார்கள்.
3. நான் சொல்வது மட்டும்தான் சரி. நீயென்ன சொல்வது என்ற எண்ணம் இல்லாமல் மற்றவர்கள் சொல்லும் வார்தையும் கேட்பார்கள். ஆனால் முடிவு அவர்களுடையதே.
4. கேள்விகள் கேட்கத் தயங்கமாட்டார்கள்.
5. முடிவுகள் எடுப்பதில் கில்லியாக இருப்பார்கள்.
6. நேரத்தை வீணடிக்காமல் அடுத்து என்ன? என்று இருப்பார்கள்.
7. எந்தொரு விஷயத்திலும் 100 க்கு 200 வீதம் கொடுப்பார்கள்.
8. அவர்களின் உற்று நோக்கும் தன்மை பக்காவாக இருக்கும்.
9. பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள்.
10. அதிகமாக கோபப்பட்டு பேச மாட்டார்கள்.
11. அவர்களின் செயல்பாடுகள் சரியானது இருக்கும்.
12. தன் தவறை ஒப்புக் கொள்வார்கள். தவறென்று தெரிந்தும் விவாதம் செய்யமாட்டார்கள்.
13. ட்ரெண்ட்டை பின்பற்றாமல் தானே ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள்.
14. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பக்காவாக இருப்பார்கள்.
15. முக்கியமாக, தான் ஒரு புத்திசாலி என்று உலகுக்கு உரைக்க மாட்டார்கள். கற்றது இம்மியளவு என்பதை உணர்ந்தே இருப்பார்கள்.
கருத்துரையிடுக