வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்
அனைத்து உணவுகளிலும் தவறாமல் சேர்த்து சமைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் வெங்காயம்.வெங்காயத்தை உரிக்கும் போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.
வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான்.
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெல்லாரி/பெரிய வெங்காயம் என்று இரண்டு வகைகள் இருந்தாலும், இவை ஒரே நன்மைகளைத் தான் கொடுக்கின்றன. மேலும் வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்றவைகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த வெங்காயத்தை பல நாடுகளில் மருந்துவ பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய பங்கினை வகிக்கிறது.
பயன்கள்:
1.வெங்காயத்தை தோலுரித்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும்.
2.வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
3.வெங்காய சாற்றினை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
4.வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, பின் வெறும் வெங்காயச் சாற்றினைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
5.வெங்காய சாற்றில் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். இல்லாவிட்டால் பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
கருத்துரையிடுக