இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.
இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.
இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.
இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்
கருத்துரையிடுக