2021 முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?
1. அமெரிக்க அதிபர் மாற்றம்:
அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடன், இம்மாதம் 20-ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகப் பதவி ஏற்கவுள்ளார்.
2.உலக அளவில் COVID-19 தடுப்பூசி போடும் திட்டம்:
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து, கிட்டத்தட்ட 50 நாடுகளில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளது. இவ்வாண்டு இந்தியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட மற்ற சில நாடுகளிலும் தைவானிலும் தடுப்பு மருந்து மக்களுக்கு போடப்படும்.
3. உலகப் பொருளியல் கருத்தரங்கு:
சிங்கப்பூர் மே மாதத்தில், உலகப் பொருளியல் கருத்தரங்கை ஏற்று நடத்தவிருக்கிறது.உலக அளவில், கிருமித்தொற்றை எதிர்கொள்வது குறித்துக் கருத்தரங்கில் பேசப்படும்
4.ஒலிம்பிக் போட்டிகள்:
ஜூலை மாதம் 23-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.James Webb Space தொலைநோக்கியின் அறிமுகம்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ESA ஆகியவை தற்போது Hubble விண்வெளித் தொலைநோக்காடியைப் பயன்படுத்தி வருகின்றன.
அதை விட அதிக ஆற்றல் மிகுந்த, ஐந்து மடங்கு பெரிய James Webb Space தொலைநோக்கி, அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும். அதன்மூலம், இன்னும் அதிகத் தொலைவிலுள்ள, எளிதில் கண்ணுக்குப் புலப்படாத கோள்களையும் காணமுடியும்.
கருத்துரையிடுக