பீட்ரூட் தரும் நன்மைகள்
விலைகுறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட் குறித்து, முழுமையான விளக்க பட்டியலை பார்ப்போம்.
பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
1.நீரிழிவு
உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வின்படி, இதிலிருந்து பெறப்படும் ஒருவகை நார்ச்சத்து ஹைப்பர் கிளைசீமியாவைக் (இரத்த சர்க்கரை மிகைப்பு) கட்டுப்படுத்துகிறது.
இங்கிலாந்தின் ஆய்வின்படி, பீட்ரூட் சாறு உட்கொள்வது போஸ்ட்ராண்டியல் (உணவுக்குப் பிறகு உயரும் சர்க்கரை அளவு) கிளைசீமியாவை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டது.
2. இதய நோய்கள்
இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
ஆய்வின்படி, ஒருவார கால அளவில் பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ளும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
மற்றொரு அமெரிக்க ஆய்வானது, பீட்ரூட் சாறு உட்கொள்வது மாரடைப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக கூறியுள்ளது.
எலிகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வில், எலும்பு தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது.
3.இரத்த அழுத்தம்
ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.பீட்ரூட் சாறு நான்கு வாரங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது கண்டறியப்பட்டது. வல்லுனர்களின் கூற்றுப்படி, இதில் உள்ள நைட்ரேட்டுகளை மனித உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இந்த செயல்பாடு காரணமாக இரத்த நாளங்கள் விரிவடைகின்றன.
4.புற்றுநோய்
பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல, வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
5.எலும்புகள் மற்றும் பற்களின் பாதுகாப்பு
பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.
பீட்ரூட் ஜூஸ்ஸில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றம் அடைவதை ஏற்கனவே பார்த்தோம். ஜப்பானிய ஆராய்ச்சி ஒன்றில், நைட்ரிக் ஆக்சைடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களுக்கு தீர்வு அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிகிச்சையளிக்க பீட்ரூட் தகுந்த நிவாரணி என கூற மற்றொரு காரணம் ‘சிலிக்கா’ இருப்பதுதான்.
கால்சியத்தை திறமையாக பயன்படுத்த உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் சில தேவைப்படுகிறது.
கருத்துரையிடுக