நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் - பஸ் ஆல்ட்ரின்
- அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும்.
- இவர் பஸ் (Buzz) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே, இவர் தனது பெயரை ,பஸ் ஆல்ட்ரின், என அதிகாரபூர்வமாக 1988ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார்.
- 1963ஆம் ஆண்டு நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலாவை நோக்கி பயணம் செய்த இவர், சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர்.
.
கருத்துரையிடுக