கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்
பொதுவாகவே கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம்.
கத்தரிக்காய் குறித்த ஆய்வு ஒன்றின் படி, அதில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இல்லை.
அப்படியிருந்தும் ஏன் இது நன்மை தரும் உணவு என்று கூறுகிறோம் என்று தெரிந்து கொள்வோம்.
- இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும்.
- உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது.
- கத்தரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் காய்கறியாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை சிறந்து சக்தி தரும் பொருட்களாக அமைகின்றது.
- நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கையான முறையில் நிறுத்த விரும்பினால் இதோ ஒரு கத்தரிக்காய். இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய் கத்தரிக்காயாகும். இது நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகிறது.
கருத்துரையிடுக