மொகுஜென் என்னும் ஜென் துறவிக்கு எப்படி சிரிப்பதென்றே தெரியாது, சொல்லப்போனால் எப்போதும் முகத்தை கோபமாக இருப்பது போலவே வைத்திருப்பார். ஒரு நாள் அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே "இந்த உலகத்தை விட்டு போகப் போகிறோம்" என்பதை உணர்ந்த அவர் தன் சீடர்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்பினார். அது என்னவென்றால், நீங்கள் என்னிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் படித்துள்ளனர்.
எங்கே நீங்கள் கற்றுக் கொண்ட ஜென் தத்துவத்தை வெளிகாட்டுங்கள் என்று சொன்னார். பின் யார் ஒருவர் அதனை சரியாக வெளிப்படுத்துகிறாரோ, அவரே என் வாரிசு மற்றும் அவர் என் கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அனைத்து சீடர்களும் பதிலளிக்காமல், மொகுஜென்னின் சிரிக்காத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்சோ என்னும் சீடன், அவரைப் பார்த்தாலே மிகவும் பயப்படுவான். இருப்பினும் அவருடன் நீண்ட நாட்கள் இருந்ததால், அவரின் அருகில் சென்று, அங்குள்ள ஒரு மருந்து கோப்பையை நகர்த்தினான். இதுவே துறவியின் கேள்விக்கான பதில் என்பது போல் அந்த என்சோ வெளிப்படுத்தினான்.
அப்போது அந்த துறவியின் முகம் இன்னும் கடுமையாக மாறியது. பின் அந்த துறவி "என்ன அனைவருக்கும் புரிந்ததா?" என்று கேட்டார். அதனைக் கண்ட அவன், உடனே எழுந்து வெளியே சென்று விட்டு, திரும்பி பார்த்து, மீண்டும் அவரின் அருகில் சென்று, அந்த கோப்பையை நகர்த்தினான். பின்னர் இதுவரை சிரிக்காமல் இருந்த துறவியின் முகமானது, அவனது செய்கையைக் கண்டு, புன்னகையானது பீறிட்டு வெளிவந்தது.
பிறகு அந்த துறவி அவனிடம் "முட்டாளே! நீ என்னுடன் பத்தாண்டுகள் இருந்தாய். நீயோ இதுவரை என் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று பார்த்ததில்லை. இருப்பினும் நீ அதைப் புரிந்து கொண்டு, எனக்கு உதவினாய். ஆகவே நீ இந்த கோப்பையை எடுத்துக் கொள். இனிமேல் இது உனக்கு சொந்தமானவை" என்று சொன்னார்.
கருத்துரையிடுக