A+ A-

புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை

 புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை

புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை

ஒரு கிராமத்தில் சிறுஆசிரமம் அமைத்து முட்டாளான பரமார்த்தர் அடிமுட்டாள்களான தனது 5 சிஷ்யர்களுடன் இருந்தபோது, அவர்கள் திருத்தல யாத்திரை செல்ல ஆவல்கொண்டு, வழியில் சாப்பிட கட்டுசாதம் செய்து எடுத்துக்கொள்ள எண்ணி, பரமார்த்தகுரு ஒருசீடனை அழைத்து, சமையலுக்கு சுத்தமான உப்பை வாங்கிவா என அனுப்ப, கடையில் உப்பை வாங்கிய சீடன் " உப்பு சுத்தமானதுதானே"? எனக்கேட்க, அவனோ உப்பில் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறினான்.

 சீடன் " என்ன இப்படிக் கூறிவிட்டாய்? என் குருநாதர் சுத்தமான உப்பை மட்டுமே வாங்கிவரச் சொல்லியிருக்கிறார் " எனச்சத்தமிட்டான். கடைக்காரர் இவர்களின் இலட்சணத்தை உணர்ந்துகொண்டு " ஐயா, மன்னித்துவிடுங்கள், உங்கள் குரு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், நீங்கள் உப்பை சமைக்குமுன் நன்றாக தண்ணீர்விட்டு அலசி சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள்" எனக்கூறி அனுப்பிவிட்டார். 

"அப்படி வா வழிக்கு, யாரை எமாற்றப்பார்த்தாய்" என்று கிளம்பி வரும்வழியில், ஒரு ஆற்றைக் கடந்தபோது, உப்பை இந்த ஆற்றில் அலசிச் சென்றால், குருநாதரும் சுத்தமான உப்பா என்று நம்மைக் கேட்டால்.. நன்கு ஆற்றில் அலசி சுத்தப்படுத்தி தான் கொண்டுவந்தேன் என்றால் குரு நம்மைப்பாராட்டுவார் என எண்ணி, உப்பைப் பையுடன் நீரில் நன்கு அமிழ்த்திப்பின் பையைத் தோளில் போட்டுக்கொண்டு, நனைந்த உப்பு கரைவதை உணராமல், ஆசிரமம் சென்றான். 

எங்கே உப்பு என்று குருநாதர் கேட்க, சுத்தமான உப்பு வாங்க லேட்டாகிவிட்டது என்றுகூறி பையை அவரிடம் கொடுத்தான். " என்ன வெறும்பை.. உப்பு எங்கே?" இவனும் கடைக்காரன் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம் என்றதால் வழியில் ஆற்றில் சுத்தம் செய்ததாகக்கூற, முட்டாள் குரு, "சரியாகத்தான் செய்திருக்கிறான் சீடன்.

 ஆனால் உப்பு எங்கேபோனது? என்று சமையலை மறந்து, முட்டாள் சீடன் நீரில் கரைத்த உப்பு நீரோடு சென்றதை அறியாமல் சுத்தமான உப்பு எங்கே போனது? என யோசனையில் ஆழ்ந்தனர். மற்ற சீடர்களும் யோசிக்க ஆரம்பித்தனர், இப்போது தெரிகிறதா, இவர்களின் முட்டாள்தனம்.


ஒரு கிராமத்தில் சிறுஆசிரமம் அமைத்து முட்டாளான பரமார்த்தர் அடிமுட்டாள்களான தனது 5 சிஷ்யர்களுடன் இருந்தபோது