இரவில் தூங்கும்போது தலைக்கு அருகே தண்ணீர் வைப்பதற்கான காரணம் என்ன ?
ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் எந்த வகையிலும் ஏற்படலாம். ஆனால், இவற்றில் இருந்து மனநோய் வேறுபட்டது. இதற்கு ஆன்மீக ரீதியிலான காரணங்களும், நிவாரணங்களும் கூறப்படுவது உண்டு.
வீட்டில் தொடர்ந்து யாருக்காவது சோர்வு, மன அழுத்தம், மன நோய் காணப்பட்டால் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது அதை நீக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. கோயில்களுக்குச் சென்று பூஜை செய்யக் கூறுவதும், வீட்டிலேயே யாகங்கள் நடத்துவது என்று பரிகாரங்கள் செய்வது உண்டு.
இவற்றை எல்லாம் நீக்குவதற்குத்தான், இரவில் தூங்கும்போது, தலைக்கு அருகில் ஒரு டம்ளரில் அல்லது செம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு நமது வீட்டுப் பெரியோர்கள் தூங்குவது உண்டு. இதற்கான விடை யாருக்கும் தெரியாது. இரவில் தாகம் எடுத்தால், குடிப்பதற்கு என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அது கிடையாது.
இரவில் உலவும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவே அதுமாதிரி வைக்கப்படுகிறது.இரவில் தூங்கும்போது தலைக்கு அருகே ஒரு டம்ளரில் தண்ணீர் வைக்க வேண்டும். காலையில் அந்தத் தண்ணீரை வெளியே வீசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது.
அந்த தண்ணீரில் சிறு சிறு குமிழிகள் காணப்பட்டால், கெட்ட சக்தி நீக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். அப்படி இல்லையென்றால், கெட்ட சக்தி உங்களது வீட்டில் இல்லை என்று அர்த்தம். நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம். இதுவே நமக்கு மன நிம்மதியைக் கொடுக்கும்.
கருத்துரையிடுக