இன்று பிப்ரவரி 4 2020, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிக மோசமாக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. 2012-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர்.
புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபுகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று போன்ற காரணங்களாலும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் இந்நோய் வரலாம்.
இன்று பிப்ரவரி 4 2020, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில
கருத்துரையிடுக