தாதாசாஹேப் பால்கே
- இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
- பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
- 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
- தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
- வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
மேலும்
1.நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்
3.மூலக்கூறு உயிரியலின் தந்தை - ஜாக்குவஸ் லூசியன் மோனாட்
4.மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை
7.2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி
8.சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர்..!
9.ரப்பர் டயரை கண்டுபிடித்தவர் யார் ..?
கருத்துரையிடுக