இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.
இவர் 1808ஆம் காலக்கட்டத்தில் நோயியல், உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து 'ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்தார்.
சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் தனது 45வது வயதில் (1826) மறைந்தார்.
இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
பல தடைகளுக்கு பிறகு மருத்துவம்
கருத்துரையிடுக