குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க
இந்த வருடத்துக்கான வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. `இப்பதானே பனிக்காலம் முடிஞ்சது.
பிப்ரவரி இறுதியிலேயே எட்டு, எட்டரைக்கெல்லாம் முகம் எரிகிற அளவுக்கு தன் கடமையை ஆற்ற ஆரம்பித்துவிட்டது.
விளைவு, கத்திரி வெயிலில் வருகிற அம்மை இப்போதே குழந்தைகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது.
இந்தப் பிரச்னை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள்.
குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான்.
நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள்.
சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும்.
இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் கிடைக்கிறது.''
கருத்துரையிடுக