என்றி டிரேப்பர்
என்றி டிரேப்பரின் தந்தை, யோன் வில்லியம் டிரேப்பர் ஒரு பெயர்பெற்ற மருத்துவரும் வேதியியலாளரும் தாவரவியலாளரும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார்.
1839ல் முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கி ஒன்றினூடாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.
என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
1867ல் இவர் பணக்காரரான மேரி அன்னா பாமர் என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார்.
1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர்.
ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.
1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரட்டை நுரையீரல் உறையழற்சி நோயினால் நவம்பர் 20, 1882 ல் காலமானார்.
கருத்துரையிடுக