தேசிய தடுப்பூசி தினம்
- போலியோவை நாட்டிலிருந்தே விரட்டவேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
- அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
கருத்துரையிடுக