விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்
- வலண்டீனா விளாடிமீரொவுனா தெரெசுக்கோவா மார்ச் 6, 1937 அன்று பிறந்தவர்.
- அவர் ஓய்வு பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
- விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.
- இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
- 1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
- சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.
- சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வலண்டீனா.
கருத்துரையிடுக