வி. சாந்தா
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.
இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.
இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
19 ஜனவரி 2021 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கருத்துரையிடுக