ஆமணக்கு எண்ணெயின் மருத்துவப் பயன்கள்
- விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில்பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.
- விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
- இந்தியாவின் பஸ்தர் பழங்குடி மக்கள் இதன் இலைச்சாற்றை மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்கவும், இளம் இலைகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
- சிறு வயது குழந்தைகளாக இருந்தாலும் காலையில் வெறும் வயிற்றில் கால் தம்ளர் மிதமான வெந்நீரில் 5 முதல் 10 சொட்டு கள் வரை (வயதுக் கேற்ப) விட்டு கலந்து குடிக்க வைத்தால் அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்.
- இரவு படுக்கும் முன்பு சில துளி விளக்கெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் போன்று தேய்த்து வந்தால் சரும துவாரங்களின் வழியாக எண்ணெய் உட்புகுந்து மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதோடு வலியை யும் குறைக்கிறது.
- விளக்கெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி நன்றாக குழைத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் போல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண்கள் புத்துணர்வோடு இருக்கும். கருவளையம் இருந்த இடம் தெரியாது.
கருத்துரையிடுக