இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலரை சன்மானமாக வழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,36,875 ரூபாய்க்கு அந்த தொகை நிகராகும்.
Bug Bounty Program எனும் திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதாவது வாடிக்கையாளர்களின் மைக்ரோசாப்ட் கணக்குகளை எளிதில் ஹைஜெக் (hijack) செய்யப்படலாம் என்ற பாதிப்பை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறிந்ததற்காக இந்த சன்மானம் லட்சுமண் முத்தையா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்ற பிழையை முத்தையா கண்டறிந்தார் என்று கூறப்படுகிறது. எனவே இது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மைக்ரோசாப் நிறுவனத்திற்கு தெரிவித்ததன் மூலம் முத்தையா இந்த சன்மானத்தை பெற்றுள்ளார்.
கருத்துரையிடுக