ஜியோபுக்' லேப்டாப்
ஜியோ நிறுவனம் புதிதாக 'ஜியோபுக்' (JioBook) என்ற மலிவு விலை லேப்டாப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் தயாரிப்பு சரிபார்ப்பு சோதனை கட்டத்தை இந்த ஆண்டின் நடுப்பகுதியில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் ஜியோபுக்கின் முன்மாதிரியை நிறுவனம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபுக்கின் புகைப்படம் இந்த லேப்டாப் அதன் இறுதி வளர்ச்சி கட்டத்தில் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
JioBook சிறப்பம்சங்கள்
- 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
- ஸ்னாப்டிராகன் எக்ஸ் 12 4 ஜி மோடம்
- 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ்
- 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்
கருத்துரையிடுக