கருஞ்சீரகம் மருத்துவம் நன்மைகள்
- கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன.
- தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.
- கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.
- பாக்டீரியாக்களால் ஏற்படும் தோல் வியாதியைக் குணப்படுத்தக் கருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளலாம்.
- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை அளவான அளவு எடுத்துக்கொள்ளலாம்.
- வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்
- நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையான ஒன்றுதான். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை செய்யும் ,கெட்ட கொலஸ்ட்ரால் தீங்கு செய்யும்.கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
- பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும். பூச்சித்தொல்லையால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரி குழந்தைகளுக்கு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து பருக தரலாம்.
- கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள்,கொப்பளங்கள்,புண்கள் மறையும்.
- இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது. தினம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் பொடியைக் கலந்து அருந்தலாம்.
கருத்துரையிடுக